வீட்டில் இருந்தபடியே
ஆன்லைனில் உங்கள் டிகிரியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
அதற்கு முன் நீங்கள்
ஏற்கனவே பதிவு செய்த போது ஒரு பதிவு அட்டை கொடுத்திருப்பார்கள். அதில் ஒரு 4
அல்லது 5 இலக்க பதிவு எண் இருக்கும். அதையும் உங்கள் இறுதி
மதிப்பெண் பட்டியல்(Consolidated Mark
sheet) பின்புறம் ஒரு வரிசை எண்
இருக்கும். இரண்டையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2) கொடுக்கப்பட்ட ‘லாகின்’ பாக்ஸ்ல் உங்கள் பதிவெண்னை(அவர்கள்
குறிப்பிட்டுள்ள formatல்) எண்டர் செய்து பின் உங்கள் பிறந்த தேதியை(dd/mm/yyyy) பாஸ்வேர்டாக எண்டர் செய்யவும் ஸ்லாஸ் வுடன்.
3) லாகின் செய்தவுடன்
உங்கள் பழைய பதிவுகள் இருக்கும்.
4) ‘For Registering at Professional & Executive
Employment Office Chennai/Madurai- Click
here’ என்பதை சொடுக்கவும்.(கிளிக்
செய்யவும்). கீழ் காணும் விண்டோ தோன்றும்.
5) கேட்கப்பட்ட
அனைத்து தகவல்களையும் கவனமாக எண்டர் செய்யவும்.
Certificate number of
Mark sheet 1 என்பதில் ‘Consolidated
Mark sheet’ சீரியல் எண்.
6) அனைத்தையும்
முடித்த பின் ஒரு புதிய ‘பதிவு அட்டை’ டவுன்லோடு ஆகும். அவ்வளவு தான்.
பின் குறிப்பு:
லாகின் செய்கையில் ‘ Invalid Register number’ என்று பிழை வந்தால்
பதிவ எண்னை சரியான முறையில் எண்டர் செய்துள்ளீர்களா என்று சரிபார்க்கவும்.
சரியாக இருந்தும்
பிழை வந்தால் நீங்கள் உங்கள் பதிவை 3ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க
தவறியிருக்கலாம்.
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை தொடர்பு கொள்வது நலம்.
0 கருத்துகள்